தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருமணத்திற்கு அப்பாற்பட்ட காதலியை கொலை செய்த காதலன் கைது!

சென்னை: பெரியமேடு பகுதியில் பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய திருமணத்திற்கு அப்பாற்பட்ட காதலனை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட காதலியை கொலை செய்த காதலன் கைது!

By

Published : Aug 11, 2019, 8:54 PM IST

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று மர்மமான முறையில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார் பெரியமேடு காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சடலமாக தொங்கிய பெண் மோகனா என்றும் அவர் ரயில்வேயில் பணியாற்றியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரிடம் கடந்த மூன்று வருடமாக நெருங்கி பழகி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கு இடையே தகராறு முற்ற அதில் ஆத்திரமுற்ற வீராசாமி, மோகனாவை தான் அணிந்திருந்த வேட்டியால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மோகனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவர் தற்கொலை செய்ததை போன்று மின்விசிறியில் புடவையால் மோகனாவின் சடலத்தை தூக்கில் தொங்குவது போல் அமைத்து விட்டு, வீராச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே வீராசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து வீராசாமிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details