வேலூர்: வேலூர் மாவட்டம், இலவம்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி(37). அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன்(56) என்பவர் தனது வீட்டுமனை பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரேவதியை அனுகியுள்ளார்.
அந்த வேலையை முடித்து கொடுக்க வேண்டுமானால் 2,500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ரேவதி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடராஜன் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று(டிச.16) வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையிலான குழுவினர், ரசாயனம் தடவப்பட்ட பணத்தை நடராஜனிடம் கொடுத்து அனுப்பி ரேவதியிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். அந்த பணத்தை பெற்ற ரேவதி லஞ்சமாக பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, ரேவதி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கந்துவட்டி தொல்லை: தமிழ் ஆசிரியர் தற்கொலை!