தமிழ்நாடு

tamil nadu

மாணவர்களிடம் கஞ்சா விற்பனை: பிகாரைச் சேர்ந்த இருவர் கைது

By

Published : Feb 3, 2020, 12:05 PM IST

சென்னை: பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துவந்த பிகாரைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

arrest
arrest

ஆதம்பாக்கம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில், தனியாக வீடு எடுத்து கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த வீட்டிலிருந்த கௌரப் குமார் (20) மணிஷ் சிங் (23) ஆகிய இருவரையும் காவலர்கள் கைதுசெய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பல மாதங்களாக அப்பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு மாவா பாக்கெட், கஞ்சாவை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரிடமிருந்தும் 9 கிலோ மாவா, சுமார் 1 கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details