தூத்துக்குடி மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக முகநூலில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை நம்பி தூத்துக்குடி கழுகுமலையை சேர்ந்த இரண்டு பெண்கள் அந்த நபரிடம் அடிக்கடி முகநூலில் பேசி வந்துள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்கள்: வைரல் வீடியோ
தூத்துக்குடி: தன்னுடன் பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் தனியார் தொலைக்காட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபருக்கு இரண்டு பெண்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும், அந்த நபர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அந்த பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அவரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய அந்த இரண்டு பெண்களும் வேலை தொடர்பாக பேசுவதற்கு தங்களது வீட்டிற்கு அந்த நபரை அழைத்துள்ளனர்.
பின்னர், அழைப்பையேற்று வீட்டிற்குச் சென்ற அந்த நபர் தொலைக்காட்சியில் வேலை வேண்டும் என்றால் தன்னுடன் பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் அந்த நபரின் சட்டையைப் பிடித்து அடித்துக் கொண்டே தெருவில் சென்றுள்ளனர். அப்போது, விசயமறிந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். எந்த முகநூல் மூலம் பெண்களை ஏமாற்ற நினைத்தாரோ அதே முகநூலில் தான் அவர் உதை வாங்கிய காணொலியும் வைராலாகி வருகிறது.