பேரூரை அடுத்துள்ள தீத்திபாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவருடைய விவசாய நிலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் பழமையான சந்தன மரம் இருந்துள்ளது. அந்த மரத்தை பாதுகாக்க இரண்டு நாய்களை மரத்தின் அருகிலேயே கட்டி வைத்து குருநாதன் வளர்த்து வந்துள்ளார்.
நாய்களுக்கு விஷம் கொடுத்து சந்தன மரம் வெட்டிக் கடத்தல்!
கோயம்புத்தூர்: காவல் நாய்களுக்கு விஷம் கொடுத்து நள்ளிரவில் சந்தன மரத்தை வெட்டிக்கடத்தியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு குருநாதன் தோட்டத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பிஸ்கட்டில் விஷம் வைத்து இரண்டு நாய்களுக்கும் கொடுத்துவிட்டு, சந்தன மரத்தை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்ட இரு நாய்களில் ஒரு நாய் உயிரிழந்த நிலையில், மற்றொரு நாய் உயிருக்குப் போராடி வருகிறது. இதுகுறித்து குருநாதன் பேரூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில், சந்தன மரம் வெட்டிக்கடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் வருமான வரித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!