அம்ரோஹா (உத்திர பிரதேசம்): எல்.ஐ.சி முகவர் வீட்டிலிருந்து மும்பை சிறப்புப் பணிக்குழு அலுவலர்கள் ரூ.2 கோடி மதிப்பிலான திருட்டுப் பொருள்களை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில் போர்வைகள், இரசாயனங்கள், செப்பு-பித்தளை பரிசுப் பொருள்கள், எண்ணெய் பீப்பாய்கள் போன்ற பல பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து சுபோத்நகர் காலனியிலுள்ள எல்ஐசி முகவர் வீட்டில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடைய பாஜக கட்சியின் பிரமுகரையும் தற்போது காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆடுகளை திருடும் தம்பதி; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!
இது குறித்துப் பேசிய உத்திர பிரதேச மாநில அம்ரோஹா காவல் துறை அலுவலர் விஜய் குமார் ராணா, “மும்பை சிறப்புப் பணிக்குழு அலுவலர்கள் (எஸ்.டி.எஃப்) மாநிலத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் சோதனைகளை மேற்கொண்டு திருட்டு பொருள்களை மீட்டுச்சென்றனர்” என்று கூறினார்.