கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தீபா, காவலர்கள் சகிதம் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு பெரியகங்கணாங்குப்பம் சுடுகாடு அருகே கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!
கடலூர்: சாராய வியாபாரி மீது மதுவிலக்கு பிரிவின் கீழ் எட்டு வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது மாளிகம்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் அருள்வேல் (எ) அருள் (45) என்பவர் மூன்று பாலித்தீன் பைகளில் சுமார் 105 லிட்டர் சாராயம் வைத்திருந்தார். பின்னர் அவரை காவல் துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர் மீது காடாம்புலியூர், நடுவீரப்பட்டு,கடலூர் மதுவிலக்கு பிரிவுகளில் எட்டு வழக்குகள் உள்ளன. எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் அருள்வேல் (எ) அருள் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு - ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது!