தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 16, 2020, 10:49 PM IST

ETV Bharat / jagte-raho

போக்சோ வழக்கு: சிறுமியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை!

சிறுமி பாலியல் வன்புணர்வு தொடர்பாக பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

life prison for pocso accused
life prison for pocso accused

கோயம்புத்தூர்:போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி ஆனைமனையில் பணி செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளார். சிறுமியின் தந்தை, மகளுக்கு பாலியல் ரிதியில் துன்புறுத்தி வந்துள்ளார். இது தெரிந்தும் அதை சிறுமியின் தாய் கண்டுகொள்ளாமல் அதற்கு உடந்தையாக இருந்து வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் ஆனைமலை காவல் துறையினர் 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details