தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை திண்டுக்கலில் மீட்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கல் அருகே மீட்கப்பட்டுள்ளது.

child
child

By

Published : Jan 14, 2020, 2:05 PM IST

Updated : Jan 14, 2020, 4:38 PM IST

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் தனது கணவர் அமீத், இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். கண் விழித்து பார்க்கும்போது அவரது 2 வயது குழந்தையான ரஷிதா காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மஜீனா, ரயில் நிலைய காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணையை தொடங்கிய காவல் துறையினர், மஜீனாவின் கணவர் அமீத்தின் நண்பர், குழந்தை ரஷிதாவை கொண்டுசெல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் அந்த நபரை காவல் துறையினர் தேடிவந்தனர்.

இந்நிலையில், இன்று மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவுத் தொடர்வண்டி, திண்டுக்கல் நிறுத்தத்திற்கு வந்தபோது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் குழந்தையுடன் ஏறியிருக்கிறார். இதுகுறித்து சகப் பயணிகள் உடனடியாக திண்டுக்கல் ரயில் நிலைய காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீபக் மண்டல் எனவும், அவரிடமுள்ள குழந்தை நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட மஜீனாவின் பெண் குழந்தை ரஷிதா என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட தீபக் சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளார்.

இதையும் படிங்க: பெண் குழந்தை கடத்தல் - சென்ட்ரலில் அதிர்ச்சி நிகழ்வு!

Last Updated : Jan 14, 2020, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details