தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கேரளா தங்க கடத்தல்: ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 5 நாள் சுங்கக் காவல்!

கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்க அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரின் பிணை மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Kerala gold smuggling Swapna Suresh Sandeep Nair Customs custody கேரள தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா சுரேஷ் சந்தீப் நாயர் சுங்க அலுவலர்கள்
Kerala gold smuggling Swapna Suresh Sandeep Nair Customs custody கேரள தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா சுரேஷ் சந்தீப் நாயர் சுங்க அலுவலர்கள்

By

Published : Jul 28, 2020, 3:38 PM IST

கொச்சி:கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள விமான நிலையத்தில் ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் ஜூலை5ஆம் தேதி சிக்கியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ஹம்ஜத் அலி, சம்ஜூ, முகம்மது அன்வர், ஜிப்சல் மற்றும் முகம்மது அப்துல் ஷமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணை கொச்சி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் 5 நாள்கள் காவலில் வைத்து சுங்க அலுவலர்கள் விசாரணை நடத்த கொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் (பொருளாதார குற்றங்கள்), ஹம்ஜத் அலி, சம்ஜூ, முகம்மது அன்வர், ஜிப்சல் மற்றும் முகம்மது அப்துல் ஷமீம் ஆகிய 5 பேரின் பிணை (ஜாமின்) மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நீதிமன்றம் ஏற்கனவே ஃபைசல் ஃபரீத் மற்றும் ராபின்ஸ் கரிகன்குடியில் ஹமீத் ஆகிய இருவருக்கு பிணையில் வெளிவர முடியாதப்படி நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கக் கடத்தலில் முதன்மைச் செயலருக்கு தொடர்பு இல்லை - ஸ்வப்னா சுரேஷ்

ABOUT THE AUTHOR

...view details