கரோனா பொதுமுடக்கத்தின் போது ஆன்லைன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அதனுடன் ஆன்லைன் சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகளும் அதிகரித்துகொண்டே சென்றன.
அப்போது, இந்தக் கும்பல் நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுவதாக காவலர்கள் கூறினர். மேலும் மோசடிக்காரர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். இந்நிலையில் ஒடிசா மாநிலம் பூரியில் சைபர் க்ரைம் போலீசாரால் மோசடி கும்பல் ஒன்று கைதுசெய்யப்பட்டது. இந்தக் கும்பல் கொடுத்த தகவலின்படி பிகாரில் சோதனை தீவிரப்பட்டது.
ஆன்லைன் மோசடி கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட பிரபல நிறுவனத்தின் பெயரிலான உறைகள் முன்னதாக பிகார் காவலர்கள் ஆன்லைன் மோசடி கும்பலை கைது செய்யும் முனைப்பில் கயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய குமார் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தத் தனிப்படை காவலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இந்நிலையில் போதி கயா பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் ஆன்லைன் மோசடி கும்பல் உல்லாச பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
'நட்சத்திர விடுதியில் கும்மாளம்'- கூண்டோடு சிக்கிய ஆன்லைன் மோசடி கும்பல்! இந்தத் தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட நட்சத்திர விடுதியை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், நட்சத்திர விடுதிக்கும் ஆடல், பாடல், மது, கஞ்சா விருந்து என உற்சாகத்தில் திளைத்த 16 இளைஞர்களை கைதுசெய்தனர்.
இவர்கள் நாட்டை உலுக்கிய பிரபல சைபர் க்ரைம், ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட 16 பேரில் 9 பேர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில், கும்பலுக்கு மூளையாக, தலைவனாக செயல்பட்ட ரோஷன் குமாரும் அடங்கும். ரோஷன் குமார் பொறியியல் பட்டதாரி மாணவராவார்.
ஆன்லைன் மோசடி கும்பலிடம் பறிதுமுதல் செய்யப்பட்ட போலி தங்க நாணயங்கள் இவர்கள் பிரபல ஆன்லைன் நிறுவனங்களில் பெயர்களில் செயல்பட்டு தங்களின் மோசடி வேலைகளை தொடர்ந்துள்ளனர். இந்தக் கும்பலிடமிருந்து 2 கிலோ போலி தங்க நாணங்கள், 40 சிம் கார்டுகள், 12 வங்கி கணக்கு புத்தகங்கள், ஒரு கிலோ கஞ்சா, மதுபானம், போலி அடையாள அட்டை என பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் மோசடி: விசாரணையைத் தீவிரப்படுத்துமா சைபர் க்ரைம்?