ராமநாதபுரம் அருகேயுள்ள கள்ளர் தெருவைச் சேர்ந்தவர்கள் அருண் பிரகாஷ் (23), யோகேஷ்வரன் இவர்கள் இருவரும் தெருமுனையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், திடீரென இருவரையும் பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அருண் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யோகேஷ்வரன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்த யோகேஷ்வரனை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.