தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இங்கிலாந்து பிரதமராகும் லிஸ் டிரஸ் - ரிஷி சுனக் தோல்வி

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்தலில் 20,927 வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்கை வீழ்த்தி, லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம், இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 5, 2022, 5:23 PM IST

Updated : Sep 5, 2022, 7:36 PM IST

லண்டன்:இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு, கரோனா காலகட்டத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடியது போன்ற விவகாரத்தால் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதில், தோல்வியடைந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலை 7ஆம் தேதி தனது பிரதமர் பதவியில் இருந்தும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த தேர்தலில் வெற்றிபெற்று தலைவராக பொறுப்பேற்பவர்கள், இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், போரிஸ் ஜான்சனின் உதவியாளர்களான லிஸ் டிரஸ், போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோர் இறுதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீது பெரும் எதிர்பார்ப்பும் எழுந்தது. வெள்ளையர்கள் அல்லாத ஒருவர் இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும், தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

தொடர்ந்து, தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிவு இன்று (செப். 5) அறிவிக்கப்பட்டது. அதில், லிஸ் டிரஸ் 81 ஆயிரத்து 326 வாக்குகளையும், ரிஷி சுனக் 60,399 வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம், 20,927 வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்கை வீழ்த்தி, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக லிஸ் டிரஸ் தேர்வாகியுள்ளார். மேலும், இங்கிலாந்தின் புதிய பிரதமராகவும் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீனாவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

Last Updated : Sep 5, 2022, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details