லாங்மாண்ட்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் லாங்மாண்ட் அருகே, செஸ்னா 172, சோனெக்ஸ் செனோஸ் ஆகிய இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. கடந்த 17ஆம் தேதி டென்வர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் விமானங்கள் உடைந்து நொறுங்கியதில், மூன்று பேர் உயிரிழந்ததாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.