தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Solar Eclipse 2023: நிங்கலூ சூரிய கிரகணம் இன்று.. எந்தெந்த பகுதியில் பார்க்கலாம்?

ஆஸ்திரேலியாவில் தென்பட்ட அரிய சூரிய கிரகணத்தை பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

By

Published : Apr 20, 2023, 11:20 AM IST

Updated : Apr 20, 2023, 12:13 PM IST

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் :ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த அரிய சூரிய கிரகணத்தை பல்வேறு நாடுகளில் வந்த மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. அப்படி நீண்ட நாட்களுக்கு ஒருமுறை நிகழும் கலப்பின சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவில் காணப்பட்டது.

ஆஸ்திரேலியா நேரப்படி காலை 7.04 மணிக்கு இந்த சூரிய கிரகணம் தோன்றியது. காலை 9.46 மணி அளவில் சூரிய கிரகணத்தின் உச்ச நிலையான முழு சூரிய கிரகணம் தென்பட்டது. இந்த அரிய நிகழ்வை காண பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் எக்ஸ்மவுத் நகரில் திரண்டனர்.

நிங்கலூ பகுதியில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் என்பதால், இதற்கு நிங்கலூ சூரிய கிரகணம் எனவும் பெயரிடப்பட்டு உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இந்த சூரிய கிரகணம் தொடர்பான நிகழ்வுகளை தனது யூடியூப் சேனலில் நேரலை செய்து இருந்தது.

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தோனேசியாவில் இந்த சூரிய கிரகணம் காணப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டு சூரிய கிரகணத்தை பார்த்துச் சென்றனர்.

இதையும் படிங்க :UNFPA: உலக மக்கள்தொகையில் நம்பர் ஒன்.. இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்?

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள யாகன் சதுக்கத்திலும் சூரிய கிரகணம் தென்பட்டதால் ஆங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு இந்த கங்கண வளைய சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர். இந்திய நேரப்படி இன்று (ஏப். 20 ) அதிகாலை 3.34 மணி முதல் 6.32 மணி காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை நேரடியாக காண முடியாது.

இந்த கலப்பின சூரிய கிரகணம் இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடல் வரை காணப்பட்டதாக கூறப்படுகிறது. கடற் பரப்புக்கு மேலே ஏற்பட்ட இந்த சூரிய கிரகணத்தை சாதாரணமாக பார்க்க முடியவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் அதிர்ஷ்டசவசமாக ஒரு சிலரே இந்த முழு கிரகணத்தின் இருளைப் பார்த்ததாகவும் அல்லது கிரகணம் ஏற்படும் போது காணப்படும் நெருப்பு வளையம் போன்றவற்றை காணா முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் எனக் கூறப்படுகிறது. கடைசியாக 2013 ஆம் நாடந்த நிலையில் அடுத்ததாக 2031 ஆம் ஆண்டுக்கு மேல் காணப்படும் வானியல் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :yeman Stampede: ஏமன் நிதி உதவி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 85 பேர் பலி, 320 பேர் படுகாயம்!

Last Updated : Apr 20, 2023, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details