தமிழ்நாடு

tamil nadu

சோவியத் யூனியனின் கடைசி அதிபரான மிகைல் கோர்பச்சேவ் மறைந்தார்... உலக நாடுகள் இரங்கல்...

சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கோர்பச்சேவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.

By

Published : Aug 31, 2022, 5:00 PM IST

Published : Aug 31, 2022, 5:00 PM IST

Mikhail
Mikhail

மாஸ்கோ: ரஷ்யப் புரட்சியால் உருவான சோவியத் யூனியனின் கடைசி அதிபராக மிகைல் கோர்பச்சேவ் (Mikhail Gorbachev) கடந்த 1985ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அப்போது சோவியத் யூனியனில் 15 நாடுகள் இருந்தன.

சோவியத் யூனியனில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்த இவர், சோவியத் நாடுகள் பிரிந்து செல்லவும் அனுமதித்தார். அதன் காரணமாக சோவியத் யூனியனில் இருந்த நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன. வல்லரசாக இருந்த சோவியத் யூனியனின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர்.

1990ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவராக திகழ்ந்தவர், மிகைல். 91 வயதான மிகைல் உடல்நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். மிகைல் கோர்பச்சேவ் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய வம்சாவளி பெண்கள் மீது நிறவெறி தாக்குதல்... அமெரிக்க பெண்மணி கைது

ABOUT THE AUTHOR

...view details