ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் மத்தியப்பகுதிகளில் இன்று (அக்-9)அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இன்று அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிரீஸ் தலைநகர் ஏதேன்ஸிற்கு மேற்கு-வடமேற்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொரிந்து வளைகுடாவில் கடல் மட்டத்திலிருந்து 12.7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஏதென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோடைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.