ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கொள்கைப்படி டெவலப்பர்கள் தங்களது செயலிகளை சீன ஆப்பிள் பிளே ஸ்டோரில் பதிவேற்றுவதற்கு முன்பு சீன கட்டுப்பாட்டளர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்த நாள் முதலே, பல கேம்கள் சீன ஆப்பிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுமார் 4,500 கேம்கள் சீன பிளே ஸ்டோரிலிருந்து சீன அரசாங்கத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து ஆப்பிய நீக்கியுள்ளது.
47 ஆயிரம் செயலிகளை சீன ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கிய ஆப்பிள்!
சான் பிரான்சிஸ்கோ : புதிய கொள்கைக்கு இணங்க ஆப்பிள் நிறுவனம் சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து குறைந்தது 47,000 செயலிகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்பிள் பிளே ஸ்டோரில் பல சேவைகள் சீன அரசாங்க உரிமங்கள் மற்றும் அனுமதி பெறாமல் இயங்கி வருவதால் சீனாவின் பாதுக்காப்பில் பிரச்னை வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவை நீக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை ஆப்பிள் நிறுவனம் சீனாவின் ஆப் ஸ்டோரிலிருந்து குறைந்தது 47,000 செயலிகளை மாநில கட்டுப்பாட்டாளர்களின் புதிய கொள்கைக்கு இணங்க நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் ’டிஜிட்டல் போர்’ தான் இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.