தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்விட்டரை மிரட்டும் எலான் மஸ்க்... ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக எச்சரிக்கை..!

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Elon Musk
Elon Musk

By

Published : Jun 6, 2022, 10:25 PM IST

ட்விட்டர் நிறுவனம் போலி கணக்கு விவரங்களையும், தரவுகளையும் தரவில்லை என்றால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்துடனான எலான் மஸ்க்கின் பயணத்தை இப்போது பார்க்கலாம்...

மார்ச் 26: ட்விட்டருக்கு மாற்றாக ஒரு தளத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனம் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 4: ட்விட்டர் நிறுவனத்தின் 9 விழுக்காடு பங்குகளை வாங்கி, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஆனார்.

ஏப்ரல் 5: ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்கிற்கு இடம் வழங்கப்பட்டது. மஸ்க் வருகையால் ட்விட்டர் நிர்வாக குழுவுக்கு மதிப்புக்கூடும் என சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 11: நிர்வாக குழுவில் சேர எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததையடுத்து, நிர்வாகக் குழுவில் மஸ்க் சேரமாட்டார் என்று ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்தார்.

ஏப்ரல் 14: சுமார் 44 மில்லியன் டாலர் கொடுத்து, ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க எலான் மஸ்க் முன்வந்தார்.

ஏப்ரல் 15: மஸ்க்கை ஊக்குவிப்பதை தவிர்த்து ட்விட்டர் ஒரு தந்திரம் செய்தது. ஏற்கெனவே உள்ள பங்குதாரர்கள் கணிசமான தள்ளுபடியில் பங்குகளை வாங்க அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்தது.

ஏப்ரல் 21: ட்விட்டரை வாங்க 46.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்த மஸ்க், ட்விட்டர் நிர்வாகத்தை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழுத்தம் கொடுத்தார்.

ஏப்ரல் 25: ட்விட்டர் சுதந்திரமான பேச்சுகளை ஊக்குவிக்கவில்லை. அதனால் மக்களின் சுதந்திரமான கருத்துகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கி, அதனை தனியார்மயமாக்க விரும்புவதாக மஸ்க் தெரிவித்தார்.

ஏப்ரல் 29: ட்விட்டரை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை மஸ்க் விற்றார்.

மே 5: ட்விட்டர் நிறுவனத்தை வாங்க, ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான லேரி எலிசன் உள்ளிட்ட தொழிலதிபர்களிடமிருந்து முதலீடாக சுமார் 7.14 பில்லியன் டாலர் தொகையை எலான் மஸ்க் திரட்டினார்.

மே 10: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டரின் தடையை மாற்றியமைக்க எலான் மஸ்க் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். ட்ரம்ப்பிற்கு தடை விதித்தது முட்டாள்தனம் என்றும் தெரிவித்தார். ட்விட்டரை எவ்வாறு மாற்ற விரும்புகிறார் என்று சூசகமாக கூறினார்.

மே 13: ட்விட்டரை வாங்கும் தனது திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மஸ்க் கூறினார். இதனால் ட்விட்டரின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. அதே நேரத்தில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன.

ஜூன் 6: ஸ்பேம் மற்றும் போலிக்கணக்குகள் பற்றிய தகவல்களைத் ட்விட்டர் தர மறுப்பதாக மஸ்க் குற்றம்சாட்டினார். இந்த தகவல்களை தரவில்லை என்றால், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்தார்.

ட்விட்டர் நிறுவனத்தின் மீதான எலான் மஸ்க்கின் பிடி இறுகி வருவதால், அடுத்து என்ன நடக்கும் என ட்விட்டர் நிர்வாகம் விழிபிதுங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஏஞ்சலோ மோரியோண்டோ; காஃபி மிஷின் தந்தைக்கு டூடுல் வெளியிட்ட கூகுள்

ABOUT THE AUTHOR

...view details