தமிழ்நாடு

tamil nadu

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் மிகப்பெரும் கலவரம் -  127 பேர்  உயிரிழப்பு

By

Published : Oct 2, 2022, 9:54 AM IST

இந்தோனேவியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் திடீரென வெடித்த கலவரம் வெடித்ததில் 127 பேர் உயிரிழந்தனர்.

Etv Bharatஇந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் கலவரம் - 127 பேர் உயிரிழப்பு
Etv Bharatஇந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் கலவரம் - 127 பேர் உயிரிழப்பு

மலாங் (இந்தோனேசியா):இந்தோனேசியாவில் நேற்று(அக்-1) இரவு கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் இந்தோனேசிய கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் செபயா சுரபயா - அரேமா மலாங் அணிகள் மோதின. இறுதியில் செபயா சுரபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரேமா மலாங் அணியினை தோற்கடித்தது.

இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் கலவரம்

அப்போது இரு அணிகளின் ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது. அதன்பின் கும்பல் கும்பலாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து அறிந்த ஜாவா போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த கலவரம் காரணமாக 2 போலீஸ் அலுலர்கள் உட்பட 34 பேர் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கியும், மிதிபட்டும், காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றியும் 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:உ.பியில் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் டிராக்டர் விபத்தில் 26 பேர் பலி ...!

ABOUT THE AUTHOR

...view details