தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காசாவிலிருந்து வெளியேறிய 38,000 பாலஸ்தீனியர்கள் - ஐநா அறிக்கை

இஸ்ரேலின் போர் தாக்குதல் காரணமாக சுமார் 38,000 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் காசாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

By

Published : May 18, 2021, 4:51 PM IST

Gaza
Gaza

இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே கடந்த இரு வாரங்களாக தீவிரமான மோதல் போக்கு நிலவிவருகிறது. ரமலான் மாத வழிபாடு போது தொடங்கிய மோதல், இரு தரப்புக்கும் இடையே போர் தாக்குதலாக உருவெடுத்துள்ளது.

இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கமும் மாறிமறி வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாட்டு் எல்லைப்பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக பாலஸ்தீன தரப்பில் சேதாரம் அதிகமாக உள்ளது.

அங்கு நாள்தோறும் மின் விநியோகம் எட்டு மணிநேரம் மட்டுமே உள்ளதாகவும், 41க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ஐநாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்ததொடர் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காஸா பகுதி மக்கள் அண்டை பகுதிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.பலரும் தங்கள் வீடு, உடைமைகள் விட்டுவிட்டு குழந்தைகளுடன் ஊரை காலி செய்யும் அவலம் நிகழத்தொடங்கியுள்ளது.

இதுவரை சுமார் 38,000 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் காசாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாகவும், 2,500 பேர் வீடின்றி தவிப்பதாகவும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் - ஐநா அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details