தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

17 ஆண்டுகள் கண்டிராத சரிவில் கச்சா எண்ணெய் நிறுவனங்கள்

சிட்னி: கரோனா வைரஸ் தாக்குதலால் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் 17 ஆண்டுகள் கண்டிராத கடும் சரிவை சந்தித்துள்ளன.

By

Published : Mar 30, 2020, 11:23 AM IST

oil prices seems low
oil prices seems low

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத சரிவை உலகப் பொருளாதாரம் சந்தித்துவருகிறது.

இந்நிலையில் உலகப் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல், கச்சா எண்ணெய் நிறுவனங்களையும் இது கடுமையாகத் தாக்கி உள்ளது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு ஒரு கோடி பீப்பாய்கள் குறைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 20 டாலர் என்கின்ற அளவில் குறைந்துள்ளது.

தேவை குறைந்ததாலும், சேமித்துவைக்கப் போதிய கிடங்குகள் இல்லாததாலும் கச்சா எண்ணெய்யின் விலை அனைத்து நாடுகளிலும் குறைந்துள்ளது. 17 ஆண்டுகள் இப்படி ஒரு சரிவை சந்தித்தது இல்லை என கச்சா எண்ணெய் நிறுவனங்கள் புலம்புகின்றன.

மேலும் லண்டனில் கச்சா எண்ணெய் விற்பனை ஏழு விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வூகான் நகருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details