தமிழ்நாடு

tamil nadu

ஒமைக்ரானால் பலி... நான்காவது டோஸ் தடுப்பூசி தேவை...

By

Published : Dec 22, 2021, 3:19 PM IST

இஸ்ரேல் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் உயிழப்பு ஏற்பட்ட காரணமாக மக்கள் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

israel-reports-frist-omicron-death
israel-reports-frist-omicron-death

ஜெருசலேம்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் 91 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்தியாவிலும் 200 பேருக்கும் மேல் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் 60 வயதுடைய முதியவர் உயிழந்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை, உயிரிழந்த நபர் ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட், விரைவில் ஒமைக்ரான் பேரலை ஏற்படக்கூடும், எனவே மக்கள் அனைவரும் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். குறிப்பாக, பூஸ்டர் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:ஒமைக்ரான் அச்சுறுத்தல்: குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details