பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் புறநகர் பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்தச் சந்தையின் அருகேயுள்ள சாலையில் திங்கள்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் அருகிலிருந்த கடைகளும் இடிந்து விழுந்தன.
இந்தத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதல் ஈகை திருநாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்பு படை செய்தியாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.
கடந்த மாதம் (ஜூன்) 15ஆம் ஈராக்கின் சதர் சிட்டி மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் காயமுற்றனர். இதே பகுதியில் ஏப்ரலில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!