உக்ரைன் நாட்டின் அரசு இணையதளம் ஜனவரி 14ஆம் தேதி ஹேக்கர்களால் பெரியளவில் முடக்கப்பட்டது. இந்த ஹேக்கிங் தாக்குதலால் அந்நாட்டின் அமைச்சரவை, ஏழு அமைச்சகங்கள், கருவூலம் தேசிய அவசர சேவை, மாநில சேவைகள் ஆகியவற்றின் இணையதளங்கள் பெரிய அளவிலான ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.
இது குறித்து உக்ரைன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அரசின் கணிப்பொறிகளில் பல மோசமான மல்வேர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த மாபெரும் தாக்குதலை ரஷ்யாதான் நடத்தியுள்ளது. இதற்கான அனைத்து முகாந்திரங்களும் உள்ளன.
ரஷ்யா இதுபோன்ற ஹைப்ரிட் போரில் ஈடுபட்டுவருகிறது. தகவல் மற்றும் சைபர் பரப்பில் ரஷ்யா தொடர்ந்து தனது சக்திகள் இதுபோன்ற தக்குதலில் ஈடுபடுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.