தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த முடியாது: லண்டன் நீதிமன்றம் திட்டவட்டம்

ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை, பிரிட்டன் நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

WikiLeaks founder
ஜூலியன் அசாஞ்சேவை நாடுகடத்த முடியாது; லண்டன் நீதிமன்றம் திட்டவட்டம்

By

Published : Jan 4, 2021, 5:34 PM IST

Updated : Jan 4, 2021, 7:20 PM IST

லண்டன்: அமெரிக்காவின் ராஜதந்திர ரீதியான ஆவணங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியானது. அமெரிக்க அரசின் கணினிகளை ஹேக் செய்தது, உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க சுமத்தியது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இன்று வழக்கு விசாரணையின்போது, விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அமெரிக்க விடுத்திருந்த கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்தது. அசாஞ்ஜேவை அமெரிக்காவுக்கு அனுப்பினால் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக வழக்கை விசாரித்த நீதபிதி வனேசா பாரிட்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால், அவர் மேலும், மனஉளைச்சலுக்கு ஆளாகலாம் என்றும், அதிகாரிகள் எடுக்கும் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கான சமார்த்தியம் அவரிடம் உண்டு என்றும் நீதிபதி தெரிவித்தார்

இதையும் படிங்க:'கொடூரமான' சிறைச்சாலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

Last Updated : Jan 4, 2021, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details