லண்டன்:ஐரோப்பிய ஒன்றியத்தில் மாதவிடாய் நேரங்களில் பெண்களின் சுகாதாரத்தைப் பேணிகாக்கும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரி ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த வரி ரத்து அறிவிப்பு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரப் பொருள்கள் மலிவு விலையிலும் அவை அனைத்து பெண்களுக்கும் கிடைக்கக்கூடியதையும் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து அதிபர் ரிஷி சுனாக் குறிப்பிடுகையில், " அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். பெண்களுக்கான இந்த மருத்துவ உபகரணப் பொருள்கள் மிகவும் அத்தியாவசியமானது. எனவே, அவைகள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.