சீனாவின் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா (கோவிட் -19) வைரஸின் தாக்கம் அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, மருத்துவத் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஈரான், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கூட இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் உயிரிழப்பு!
மாட்ரிட்: கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 832 பேர் உயிரிழந்தனர்.
அதிலும் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில்தான் கோவிட் -19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று (மார்ச் 27) ஒரே நாளில் மட்டும் அங்கு 832 பேர் இந்த வைரஸால் உயிரிழந்தனர். இதனால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,690ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விமான சேவை ரத்து; ஸ்பெயினில் தவிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை!