62 குழந்தைகள் உள்பட 200 அகதிகளை ஏற்றியவாறு ஐரோப்பா நோக்கி மூன்று ரப்பர் படகுகள் வந்துகொண்டிருந்தன.
இது குறித்து தகவலிருந்த 'சீ-வாச் 3' என்ற ஜெர்மனி தொண்டு நிறுவன கப்பல் ஒன்று, மூன்று சுற்றாகச் சென்று அவர்களை மீட்டு இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள போர்டோ எம்பிடோக்லே துறைமுகத்தில் இறக்கிச் சென்றது.
மீட்கப்பட்டவர்கள் லிபியா நாட்டிலிருந்து தப்பி வந்ததாகத் தெரிகிறது.
உள்நாட்டுப் போரில் சிக்குண்டு கிடக்கும் சிரியா, ஏமன், லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தப்பித்து ஏராளமான அகதிகள் மெடிட்டரேனியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு படையெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜான் போல்டனின் புத்தகம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!