தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஊரடங்கு விதியை மீறிய இங்கிலாந்து பிரதமரின் ஆலோசகர்!

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமை சிறப்பு ஆலோசகர் ஊரடங்கு விதியை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஊரடங்கு விதியை மீறிய இங்கிலாந்து பிரதமரின் ஆலோசகர்!
ஊரடங்கு விதியை மீறிய இங்கிலாந்து பிரதமரின் ஆலோசகர்!

By

Published : May 25, 2020, 4:57 PM IST

Updated : May 26, 2020, 2:48 AM IST

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த உதவியாளரும், அவரது தலைமை ஆலோசகராகவும் இருப்பவர் டோமினிக் கம்மிங்ஸ். இவர் மார்ச் மாதம், தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி 400 கி.மீ தொலைவில் டர்ஹாமிலிருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட அவர், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அங்குள்ள பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளியானது. இந்நிலையில், அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். டோமினிக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவர் வீட்டிற்கு சென்றது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

ஊரடங்கு விதியை மீறிய இங்கிலாந்து பிரதமரின் ஆலோசகர்!

இதனிடையே, டோமினிக்ஸ் வீட்டின் முன்பாக ’லீட் பை டாங்கிஸ்’ என்ற விழிப்புணர்வு குழுவினர் கரோனா விழிப்புணர்வு காணொலிகளை தொடர்ச்சியாக விளம்பரப்படுத்திவருகிறனர். ஊரடங்கு விதியை மீறிய அவர், பதவி விலக வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து சென்னை வந்த பூனை: 3 மாதம் தனிமைப்படுத்தல் முடிந்து விடுவிப்பு!

Last Updated : May 26, 2020, 2:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details