தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவால் 45 மில்லியன் டாலர் வருமானத்தை இழக்கும் பிரிட்டிஷ் குயின்!

லண்டன்: சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால், பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், அவரது குடும்பத்தினருக்கு 45 மில்லியன் டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

By

Published : Sep 25, 2020, 11:05 PM IST

ue
que

பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் குடும்பத்தின் வருடாந்திர கணக்குகளின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தாண்டில் கரோனா தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக மாளிகையை சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகள் வராத காரணத்தால், மூன்று ஆண்டுகளுக்கான பொது நிதியில் சுமார் 19 மில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், ராணியின் லண்டன் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் வெப்பமாக்குவதலைத் தடுப்பதற்கும், பிளம்பிங் மற்றும் வயரிங் ஆகியவற்றை மாற்றுவதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தின்படி 369 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தில் 20 மில்லியன் பவுண்டுகள் (25.4 மில்லியன் டாலர்) பற்றாக்குறை ஏற்படுத்தக்கூடும் என பிரீவி பர்ஸ் கீப்பர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அரண்மனையை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்காக அரசாங்கத்திடம் பணம் வாங்க மாட்டோம். எங்களின் சொந்த செலவிலே அரண்மனை புதுப்பிக்கப்படும். ஏற்கனவே, அரண்மனையில் சில ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆட்களை நியமிப்பதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details