கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெள்ள மெள்ள இயல்பு வாழ்க்கைத் திரும்பிவந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியைக் கிளப்பியது.
இந்தத் தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று, இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இந்தியாவில் இரண்டு வாரங்களாக வேகமாகப் பரவிவருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் தொற்று, டெல்டா வைரசைவிட அதிவேகமாகப் பரவிவருகிறது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.
இதனால், பல நாடுகளில் அடுத்த கரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.