2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி, ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளால் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 130 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
பாரிஸ் தாக்குதல் - பயங்கரவாதிகளுக்கு உதவிய நபருக்கு 4 ஆண்டு சிறை!
பாரிஸ்: பாரிஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்த நபருக்கு நான்காண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இந்த தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பேருக்கு தங்க இடம் கொடுத்ததாக ஜாவத் பெண்டௌட் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜாவத்திற்கு நான்காண்டு சிறை தண்டணை விதித்து பாரிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜாவத் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.