தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜெர்மனியில் யூதர்கள் தொப்பி அணிவதை தவிர்க்க வேண்டும்!

பெர்லின்: ஜெர்மனியில் வசித்து வரும் யூதர்கள் எல்லா நேரத்திலும் தலையில் தொப்பி அணிவதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசின் யூதர்கள் மீதான பாகுபாட்டை தடுக்கும் ஆணையர் ஃபெலிக்ஸ் கெலேன் தெரிவித்துள்ளனர்.

By

Published : May 27, 2019, 9:02 AM IST

யூதர்கள்

இது தொடர்பாக அந்நாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், "என்னுடைய நிலைப்பாடு இப்போது மாறியுள்ளது. அதன்படி, ஜெர்மனியில் யூதர்கள் எல்லா நேரத்திலும் தலையில் தொப்பி அணிய நான் பரிந்துரைக்க முடியாது" என்றார். எனினும், இது குறித்து விரிவாக அவர் எதுவும் பகிரவில்லை.

இந்நிலையில், ஃபெலிக்ஸ் கெலேனின் இந்த கூற்றை இஸ்ரேல் அதிபர் ரெவின் ரிவ்லின் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். யூத மக்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவையை வழங்குவது ஜெர்மன் அரசு கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஃபெலிக்ஸ் கெலேனின் கருத்து யூத மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details