தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிறகுகள் வேண்டாம்... ஹோவர்போர்டு போதும்..!  ஆங்கிலக் கால்வாயைக் கடந்து விஞ்ஞானி சாதனை

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் ஹோவர்போர்டு (பறக்கும் சாதனம்) மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து சாதனை படைத்துள்ளார்.

zapata

By

Published : Aug 5, 2019, 8:25 AM IST

Updated : Aug 6, 2019, 8:06 AM IST

பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளை பிரிக்கும் கடற்பகுதி ஆங்கிலக் கால்வாய் ( English Channel) என்றழைக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரான்கி ஸபாடா என்ற பிரான்சு விஞ்ஞானி தான் கண்டுபிடித்த ஹோவர்போர்டு ( பறக்கும் சாதனம்) மூலம் இந்த ஆங்கிலக் கால்வாயை பறந்தே கடந்து சாதனை படைந்துள்ளார்.

பிரான்ஸின் வடக்கு கடலோர நகரமான சொங்காட்டில் (Sangatte) இருந்து பயணத்தை தொடர்ந்த பிரான்கி, 33 கி.மீ. அகலம் கொண்ட ஆங்கிலக் கால்வாயை 22 நிமிடங்களில் கடந்து, பிரிட்டனின் செயின்ட் மார்கரெட் பேவை சென்றடைந்தார்.

ஆங்கிலக் கால்வாயை பிரான்கி பறந்து கடக்கும் காட்சிகள்

இந்த பயணத்தின் போது ஒரு முறை மட்டும் நடக்கடலில் நின்றுகொண்டிருந்த படகில் இறங்கிய பிரான்கி, ஹோவர்போர்டுக்கு தேவையான எரிவாயுவை நிரப்பிக் கொண்டார்

இதன் மூலம், ஆங்கிலக் கால்வாயை ஹோவர்போர்டில் பறந்தே கடந்த முதல் மனிதர் என்ற பெருமை பிரான்கி ஸபாடா பெற்றுள்ளார்.

முன்னதாக, 10 நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற முயற்சியில் பிரான்கி ஈடுபட்டு தோல்வியடைந்தார்.

Last Updated : Aug 6, 2019, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details