ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் செயல்படும், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க், உலகில் எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிய 2012ஆம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இந்தாண்டு ஆய்வு மேற்கொள்வதற்காக, 149 நாடுகளை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்து, இரு காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்தது.
அதில் பின்லாந்து மிகவும் மகிழ்ச்சியான நாடாக மதிப்பீடு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைப் பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற நாடுகளிலேயே ஐரோப்பியர் அல்லாத ஒரே நாடு நியூசிலாந்துதான்.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா 14ஆவது இடத்தையும், இங்கிலாந்து 18ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜெர்மனி கடந்த ஆண்டில் 17ஆவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில், மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகள் முறையே ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.