பிப்ரவரி 1ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் பிரெக்ஸிட்டுக்கு பிறகான ஒப்பந்தத்தை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இறுதி செய்தன.
அந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பிரிட்டன் விமான படை விமானம் மூலம் அது லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் 1,246 பக்கம் கொண்ட வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.