தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2019, 9:07 AM IST

ETV Bharat / international

#Brexit ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்துடன் வெளியேற தயார்: பிரிட்டன் பிரதமர்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்துடன் வெளியேற தயாராகவுள்ளோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

boris

இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "இன்னும் 25 நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு நாங்கள் ( பிரிட்டன்) வெளியேறவுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்துடன் வெளியேற பிரிட்டன் தயாராக உள்ளது.

நான் முன்மொழிந்துள்ள ஒப்பந்தத்தை டொமாக்ரடிக் யூனியனிஸ்ட் பார்ட்டி, தொழிலாளர்கள் கட்சி என அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஆதரிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி ஒப்பந்தத்துடனோ, ஒப்பந்தமில்லாமலோ பிரிட்டன் கண்டிப்பாக வெளியேறும்" என்றார்.

இதையம் படிங்க :#Brexit 'விரைவுத் தேர்தலுக்கு நோ': போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் அடி!

பிரெக்ஸிட் என்றால் என்ன?

ஐரோப்பியா ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறவுள்ளது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள்.

இந்த பிரெக்ஸிட்டானது சுமுகமானதாக அமைய, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் அரசு பிரிக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தத்தில் சில பிரச்னைகள் உள்ளதால் பிரிட்டன் எம்.பி.க்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனதால் கடந்த ஜூன் மாதம் முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தன் பதவியை ராஜினாமா செய்தார்.

தெரசா மேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சனை புதிய பிரதமராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த ஜூலை மாதம் தேர்ந்தெடுத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமில்லாமலோ பிரிட்டனை (அக்டோபர் 31ஆம் தேதி) வெளியேற்றியே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ள பிரதமர் போரிஸ், எம்.பி.க்களின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெற தீவிரமாக முயன்றுவருகிறார். இதனிடையே, பிரிக்ஸிட் குறித்து போரிஸ் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details