உலக கைப்பேசிகளில் யாராலும் அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் ஆண்டுதோறும் புதிய தொழில்நுட்பத்தினால் கைப்பேசிகளை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம்தான் முதன்முதலில் முக அடையாளம் (Face Id) தொழில்நுட்பத்தினை கைப்பேசிகளில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து பல்வேறு கைப்பேசி நிறுவனங்கள் முக அடையாளம் தொழில்நுட்பத்தினை செயல்படுத்தத் தொடங்கின.
'ஃபேஸ் ஐடி' தொழில்நுட்பத்துக்கு குட் பாய் சொல்கிறது ஆப்பிள்!
கலிஃபோர்னியா: ஆப்பிள் அடுத்த வருடத்திலிருந்து முக அடையாளம்(Face Id) காணும் வசதியை நீக்கிவிட்டு முழு டிஸ்ப்ளே டச் ஐடி கைரேகை ஸ்கேனர் வடிவமைக்கவுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் முக அடையாளம் தொழில்நுட்பத்தினை நீக்கிவிட்டு முழு டிஸ்ப்ளே டச் ஐடி கைரேகை ஸ்கேனரை வடிவமைக்கவுள்ளது. இதனால் கேமரா,கைரேகை ஸ்கேனர் இரண்டையும் டிஸ்ப்ளேவில் காண முடியும்.
இந்த முறையானது 2020இல் வருகிற ஐ போன் கைப்பேசிகளில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது உள்ள டிஐட்டல் உலகத்திற்கு ஏற்ற மாதிரி வருகிற அனைத்து ஐபோன் கைப்பேசிகளிலும் ஆப்பிளுக்குச் சொந்தமான ஆப்டிகல் கைரேகை அங்கீகார அமைப்பை வடிவமைக்க முடிவு செய்துள்ளது.