தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும்... போலி பைசெப்ஸ் உருவாக்கிய குத்துச் சண்டை வீரர்..!

ரஷ்யா: குத்துச்சண்டை வீரர் கிரிலின் விபரித ஆசையால் வைக்கப்பட்ட பெட்ரோலிய ஜெல்லியால் நிரப்பட்ட போலி பாப்பாயி பைசெப்ஸ் உயிருக்கு பயந்து அகற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பாப்பாயீ பைசெப்ஸ் வேண்டும்

By

Published : Nov 19, 2019, 1:41 AM IST

Updated : Nov 19, 2019, 8:08 AM IST

ரஷ்யாவில் வசித்து வருகிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் கிரில் தெரெஷின் (Kirill Tereshin). இவருக்கு 24 அங்குல எண்ணெய் உட்செலுத்தப்பட்ட பைசெப்ஸ் வைத்து இருப்பார்.

இவர் பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும் என்னும் ஆசையில், சின்தோலுக்கு பதிலாக மலிவான வாஸ்லைன் போன்ற பெட்ரோலிய ஜெல்லியை மூன்று லிட்டர் எற்றியுள்ளார். சின்தோல் தான் பெரிய வீக்கங்களை உருவாக்கப் பாடி பில்டர்களால் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலியம் ஜெல்லியால் கிரில்லுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் ஆகியுள்ளது. பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்த கிரிஸ், இதை அகற்றாவிட்டால் கைகள் முழுவதுமாக இழக்க நேரிடம் அல்லது உயிர்போக நேரிடலாம் என எச்சரித்துள்ளார்.இதனையடுத்து கிரில்லுக்கு அறுவை சிகிச்சை மூலமாகச் சேதமடைந்த திசுக்கள் அகற்றப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிரில்

இது குறித்து மருத்துவர் மெல்னிகோவ் கூறுகையில்,"கிரில் ஒவ்வொரு கைகளிலும் சுமார் மூன்று லிட்டர் பெட்ரோலிய ஜெல்லி செலுத்தியுள்ளார். இது தசை திசுக்களை நிறைவு செய்ததும், இரத்த ஓட்டத்தையும் தடுத்துள்ளது. இதன் விளைவாகத் திசு இறந்து, ஒரு மரத்தைப் போலக் கடினமான இடமாக மாறிவிடும்.

தற்போது இதை அகற்றிவிட்டோம். ஆனாலும் அவருக்கு அதிக காய்ச்சல், வலி, பலவீனம் இருக்கிறது. பெட்ரோலியம் ஜெல்லினால் உடல் முழுவதும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாகச் சிறுநீரக பகுதி முதலில் பாதிப்புக்கு உள்ளாகும் ”எனத் தெரிவித்தார்.

தற்போது அவர் தீவிர மருத்துச் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். மேலும், சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனாவில் 800 ட்ரோன்கள் மூலம் வித்தியசமான ஒளி நிகழ்ச்சி - சூப்பர் காணொலி!

Last Updated : Nov 19, 2019, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details