தமிழ்நாடு

tamil nadu

தாலிபான்களின் வாட்ஸ்அப் முடக்கம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் நிறுவனம், தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியையும் முடக்கும் முடிவை எடுத்துள்ளது.

By

Published : Aug 18, 2021, 5:52 PM IST

Published : Aug 18, 2021, 5:52 PM IST

தாலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
தாலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

அமெரிக்க சட்டப்படி, தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் நிறுவனம், தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகளை முடக்கும் முடிவை நேற்று எடுத்தது. இதையடுத்து தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கப்பட்டன.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து வாட்ஸ்அப்

அதேபோல, ஃபேஸ்புக் நிறுவனத்தின்கீழ் இயங்கும் மற்றொரு நிறுவனமான வாட்ஸ்அப் செயலிக்கும் இந்த முடிவுகள் பொருந்தும் என முடிவு எடுத்தது. அதைத்தொடர்ந்து தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுடைய வாட்ஸ்அப் செயலியையும் ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

இதையும் படிங்க: மீரா மிதுனின் யூ-ட்யூப் பக்கத்தை முடக்க நடவடிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details