தமிழ்நாடு

tamil nadu

வட கொரிய அதிபர் உயிர் ஊசலாடுகிறதா? - அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு

By

Published : Apr 21, 2020, 10:26 AM IST

சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆபத்தான சூழலில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

kim
kim

வட கொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பதவிவகித்துவருகிறார். முன்னாள் அதிபரான தனது தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு பொறுப்பேற்ற கிம் ஜாங் உன் சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாக வலம்வருபவர்.

அமெரிக்காவுடன் நேரடி மோதல், அனு ஆயுதம் தயாரிப்பு என பல்வேறு அதிரடிகளை மேற்கொள்ளும் இவர், சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நட்பு பாராட்டத் தொடங்கினார். வரலாற்று நிகழ்வாக வட கொரியா சென்ற ட்ரம்ப் அங்கு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிபர் கிம்மை பொது நிகழ்வுகளில் பார்க்க முடியவில்லை. வட கொரியா நாட்டின் நிறுவனரும், கிம்மின் தாத்தவான கிம் சுங் பிறந்த நாள் விழா ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது. அதில்கூட அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, அமெரிக்க உளவுத்துறை தற்போது கிம் ஜான் உன் உடல் நிலை குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உடல்நிலை கோளாறு காரணமாக கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட கொரிய அரசின் எதிர்வினைகளை சர்வதேச அரங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பால் களையிழந்த வட கொரிய பிதாமகனின் நினைவு நாள்

ABOUT THE AUTHOR

...view details