தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

100-வது ஆண்டை எட்டிய ரஷ்யா -ஆப்கானிஸ்தான் உறவு!

காபூல்: ஆப்கானிஸ்தான் - ரஷ்யா இடையிலான உறவு 100ஆவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக தலிபான் பிரநிதிகளுடன், ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் - ரஷ்யா உறவு

By

Published : May 28, 2019, 9:09 AM IST

மத்திய ஆசியப் பகுதியில் உள்ள ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான், இந்தியா, துர்க்மெனிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அமெரிக்க படைக்கு, 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதன் காரணமாக தொடர் தாக்குதலை அவ்வப்போது மேற்கொண்டது. இதனால் அமைதியற்ற சூழல் உருவானதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான பேச்சவார்த்தையை அமெரிக்கா கையிலெடுத்தது. இதனையடுத்து, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தலிபான் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தொடங்கியது.

இதற்கிடையே, ஐநாவால் தடை செய்யப்பட்ட தலிபான் பயங்கரவாதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இதனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இத்தகைய சூழலில், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவு 100ஆவது ஆண்டை தற்போது எட்டியுள்ளது. இதனையொட்டி, இன்று மாஸ்கோவில் இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பங்கேற்க உள்ளதாகவும், அப்பொழுது, ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தலிபான் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்னை, தற்போது நடைபெற உள்ள மாநாடு மூலம் விரைவில் சுமுக முடிவு எட்டப்படும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details