தமிழ்நாடு

tamil nadu

இந்திய ஒடிடி தளங்களுக்கு கட்டணம் செலுத்த தடைவிதித்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் ஒடிடி தளங்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தடைவிதித்துள்ளது.

By

Published : Nov 13, 2020, 8:17 PM IST

Published : Nov 13, 2020, 8:17 PM IST

State Bank of Pakistan
State Bank of Pakistan

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அந்நாட்டின் தணிக்கைக் குழுவைத் தாண்டி இந்தியப் படங்கள் அங்கு வெளியாவது அபூர்வமானது.

இதன் காரணமாக இந்தியாவில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் போன்ற படைப்புகளை பாகிஸ்தான் மக்கள் ரசிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையை ஒரளவு மாற்றியது ஒடிடி தளங்கள்தான்.

இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவின் ஒடிடி தளங்களுக்கு கட்டணம் செலுத்த ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் தடைவிதித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகிஸ்தான் அமைச்சரவையிலிருந்து நாங்கள் ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளோம். அதில், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் இந்தியாவின் ஒடிடி தளங்களுக்கு கட்டணம் செலுத்த நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’?

ABOUT THE AUTHOR

...view details