தென் கிழக்கு ஆசியாவில் கோவிட்-19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் இருந்தது. குட்டி நாடான சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்குமோ என்று அந்நாட்டு அரசு அச்சம்கொண்டது.
இந்நிலையில், சில வாரங்களுக்குப் பின், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் குறையத் தொடங்கியது. தற்போது, சிங்கப்பூரில் 31 ஆயிரத்து 960 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் புதியதாக கரோனா பாதித்த 344 பேரில் 340 பேர் வெளிநாட்டினர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.