தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தண்டனைக்கு மேல்முறையீடு செய்யபோவதில்லை - சாம்சங் துணை தலைவர் லீ வழக்கறிஞர்!

சாம்சங் நிறுவனத்தின் லாபத்திற்காக அரசு அலுவலர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கினார் என்று உலகின் மிக மதிப்புமிக்க மனிதரான, அதன் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்யப்போவதில்லை என லீ-இன் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

By

Published : Jan 25, 2021, 9:37 PM IST

samsung Lee bribery case
samsung Lee bribery case

சியோல் (தென் கொரியா): சாம்சங் துணை தலைவர் லீ-க்கு கொடுக்கப்பட்ட தண்டனை மீது மேல்முறையீடு செய்யப்போவதில்லை என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு பிணை கோர, கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் லாபத்திற்காக அரசு அலுவலர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கியதற்காக, லீக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்காக சிறை சென்ற அவருக்கு, மேல் முறையிட்டில் விடுதலை கிடைத்தது. அப்போது அவர் ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்திருந்தார். ஆனால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

பயனர் தொழில்நுட்ப சாதனங்களின் சக்கரவர்த்தியான ‘சாம்சங்’ நிறுவனர் மரணம்!

அந்த தண்டனைக் குறிப்பில், இன்னும் இரண்டரை ஆண்டுகள் அவர் சிறை செல்ல வேண்டும் என்றிருந்தது. இச்சூழலில் சாம்சங் துணைத் தலைவர் லீ சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அது இப்போதைக்கு இல்லை என லீயின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details