தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பட்டுப் பாதை- வடக்கு கடல்வழிப் பாதை இணைக்க வேண்டும்: விளாடிமிர் புதின்

பெய்ஜிங்: சீனாவின் கடல்வழிப் பட்டுப் பாதையையும், வடக்கு கடல்வழிப் பாதையையும் இணைக்க விருப்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அதிபர் விளாடிமிர் புடினுடன், சீன அதிபர் ஜிஜின் பிங்

By

Published : Apr 28, 2019, 9:20 PM IST

ஆசியாவின் பொருளாதார ஜாம்பவனாக உயரவேண்டும் என்ற நோக்கில், ஒன் பெல்ட் ஒன் ரோடு என்றழைக்கப்படும் புதிய பட்டுப் பாதை திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

இந்த புதிய பட்டுப் பாதை குறித்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

37 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடக்கு கடல்வழிப் பாதையும், சீனாவின் கடல்வழிப் பட்டுப் பாதையையும் இணைப்பது குறித்து யோசனை செய்துவருகிறோம் என்றும் இதனால் ஐரோப்பியா - கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு ஆசியா இடையே கடல்வழி வணிகப் பாதை உருவாகக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கடல்வழிப் பாதை
வடக்கு கடல்வழிப் பாதையானது, ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான பிரதான வணிகப் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details