ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் சுமார் 50 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக நகரமான சிட்னி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. வானைத் தொடும் அடுக்குமாடி கட்டங்களைக்கூட கூட இந்த புகை சூழ்ந்து மங்கலாகத் தென்பட்டன.
காற்றின் தரம் இயல்பைவிட 10 மடங்கு அதிகமான அளவிற்கு மாசு படிந்திருப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சுவாச, இருதய கோளாறு உள்ளவர்கள் வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.