தமிழ்நாடு

tamil nadu

ஜப்பானில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் இந்தியா கடற்படை!

டோக்கியோ: புயலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு இந்திய கடற்படை உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 13, 2019, 8:55 PM IST

Published : Oct 13, 2019, 8:55 PM IST

hagibis typoon

ஜப்பானை தற்போது ஹகிபிஸ் புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் தாக்கம் 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த புயலின் கோரதாண்டவத்திற்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் மாயமாகியுள்ளனர். நூற்றும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜப்பானில் புயலால் உயிரிழந்த மக்களுக்கு இந்தியர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புயலுக்கு முன் தனது நண்பர் அபே ஷின்சோ எடுத்த துரித நடவடிக்கையால் தற்போது உள்ள சூழ்நிலையை மக்கள் எதிர்கொள்ள முடியும். இந்தியா கடற்படையினர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தினத்தில் வந்து உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ட்வீட்

மேலும் படிக்க:#PrayforJapan: 'ஹகிபிஸ்' எனும் அதிபயங்கர சூறாவளி - பீதியில் ஜப்பானியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details