தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பஞ்ச்ஷிரை நோக்கி தாலிபான் படை... ஆப்கனின் அசைக்கமுடியாத கோட்டை!

ஆப்கானிஸ்தானில் 33 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபான்கள், ஒற்றை மாகாணம் பஞ்ச்ஷிரை கைப்பற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

By

Published : Aug 23, 2021, 11:02 AM IST

Updated : Aug 23, 2021, 2:16 PM IST

அகமது மசூத்
அகமது மசூத்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கிருக்கும் மக்கள் உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அமெரிக்க விமானத்தில் ஏற நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முயன்றது, விமான டயரில் தொங்கிக்கொண்டு சென்று நடுவானிலிருந்து கீழே விழுந்து இறந்தது போன்ற கோர சம்பவங்களை கடந்த சில நாள்களாகவே பார்த்து வருகிறோம்.

33 மாகாணங்கள் அடிபணிந்துள்ள நிலையில், தாலிபான்களையே மிரளவைக்கிறது பெர்சிய மொழியில் ஐந்து சிங்கங்கள் நிலம் என அர்த்தம் கொண்ட 'பஞ்ச்ஷிர்' மாகாணம்.

'பஞ்ச்ஷிர்' மாகாணம்

பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த மாகாணம், 512 கிராமங்களுடன் ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அங்கு தோராயமாக 1 லட்சம் 73 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

வரலாற்றில் அசைக்கமுடியாத கோட்டை

காபூலின் வடகிழக்கில் 100 கி.மீ தொலைவில் உள்ள இந்த மாகாணத்தை, வரலாற்றிலே யாராலும் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு முன்பு தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தபோதும் அவர்களால் இந்த மாகாணத்தை அடைய முடியவில்லை.

பஞ்சஷிரை நோக்கி தாலிபான் படை

குறிப்பாக, 1970 - 80 வரை ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புகளின்போது கூட பஞ்ச்ஷிர் கைப்பற்றப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், பஞ்ச்ஷிர் தூணாக இருந்தவர் ஆப்கானிஸ்தானின் ஹீரோ அகமது ஷா மசூத்.

தற்போது அகமது ஷா மசூதின் 32 வயது மகன், அகமது மசூதும் தாலிபான்களுக்கு எதிராக ஓர் எதிர்ப்புப் படையை தயாராக்கி வருகிறார். அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், பஞ்சஷிரை கைப்பற்ற நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் நேற்று செல்லும் காணொலி வெளியாகியுள்ளது.

பஞ்சஷிரை நோக்கி தாலிபான்கள் படை

இதுதொடர்பாக பேசிய அகமது மசூத், தாலிபான்களை எதிர்கொள்ள எங்கள் போராளிகள் தயார் நிலையில் உள்ளனர். தாலிபான்களிடம் ஒருபோதும் பஞ்ச்ஷிர் சரணடையாது" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அகமது மசூத்

ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், நான்தான் 'ஆப்கனின் அடுத்த அதிபர்' என தாலிபான்களுக்கு சவால் விட்டவர் துணை அதிபர் அம்ருல்லா சலே. அவரும் பஞ்ச்ஷிர் மாகாணத்தை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆப்கான் நாட்டிற்கு விமானப் போக்குவரத்தை ரத்து செய்த பாகிஸ்தான்

Last Updated : Aug 23, 2021, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details